பாராளு மன்ற தேர்தல் திருவிழா 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்து உள்ளது.ஏப்ரல் 19, ஏப்ரல் 26 , மே 7, மே 13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து இன்று (1ந்தேதி) 7 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
7ம் கட்ட தேர்தல்
7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் மேற்கு வங்காளத்தல் மம்தா கட்சியனர் மற்றும் பா.ஜனதா ஆதரவாளர்களிடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. சிலர் காயம் அடைந்தனர். இதேபோல் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி மற்றும் பா.ஜனதா தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
59.40 சதவீதம் வாக்குப்பதிவு
7ம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளனர். அதிகபட்சமாக 69.89 சதவீதம் பதிவாகி உள்ளன. பீகாரில்&50.14சதவீதம், சண்டிகர்&62.80சதவீதம், இமாச்சல பிரதேசம்&67.53 சதவீதம், ஜார்கண்ட்&69.59சதவீதம், ஒடிசா&63.57சதவீதம், பஞ்சாப்&55.76சதவீதம், உத்திரபிரதேசம்&55.60 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது அன்று மாலைக்குள் தெரிந்துவிடும். இதனால் கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஜூன் 4-ம் தேதி
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலும் நடந்துள்ளது. இதில், சிக்கிம், அருணாச்சல் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் ஜூன் 2-ம் தேதி (நாளை) முடிவுக்கு வருவதால், நாளையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆனால் பாராளுமன்ற தேர்தல் வாக்குஎண்ணிக்கை ஜூன் 4-ம் தேதிதான் நடைபெறும். அதேபோல, ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் ஜூன் 4-ம் தேதி வெளியாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: 6- ம் கட்ட தேர்தலில் 59.12 சதவீதம் வாக்குப்பதிவு