7 ஆண்டு காதல்: இரவில் வீட்டுக்கு வரவழைத்து திருமணத்திற்கு மறுத்த காதலன் மர்ம உறுப்பை அறுத்த காதலி | 7-year relationship: Girlfriend cuts off boyfriend’s genitals after he refuses marriage

Spread the love

மும்பையில் உள்ள சாந்தாகுரூஸ் பகுதியை சேர்ந்த 25 வயது பெண், 44 வயதாகும் நபரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவருக்கும் ஏற்கனவே தனித்தனியாக திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. ஆனாலும் மனைவியை கைவிட்டுவிட்டு தன்னை திருமணம் செய்யும்படி 25 வயது பெண் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்தார். ஆனால் 44 வயது நபர், இருவருக்கும் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வந்தார். இருவருக்கும் இடையிலான உறவு குறித்து 44 வயது நபரின் மனைவிக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்களுள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து உறவை முறித்துக்கொள்ள 25 வயது பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிலைமையை புரிந்து கொள்ளும்படி 44 வயது நபர் தனது காதலியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் 25 வயது பெண் தனது சொந்த ஊரான பீகாரில் வேலை விசயமாக கிளம்பிச்சென்றார். அங்கிருந்துவிட்டு மீண்டும் கடந்த மாதம் 19ம் தேதி மும்பை திரும்பினார்.

24-ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அதில் எந்த வித சமரசமும் ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று இரவு போன் பண்ணி புத்தாண்டு கொண்டாட வரும்படி 44 வயது நபரை 25 வயது பெண் அழைத்தார். இதிலும் திருமண பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் 44 வயது நபர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

இரவில் புத்தாண்டுகொண்டாடிவிட்டு 44 வயது நபர் வீட்டிற்கு கிளம்ப தயானார். அந்நேரம் ஆடையை கழற்றும் படி தனது காதலனிடம் பெண் கேட்டுக்கொண்டார். அவரும் காதலிதானே என்ற நம்பிக்கையில் பேண்ட்டை கழற்றினார். அந்நேரம் சமையல் அறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காதலனின் மர்ம உறுப்பை அப்பெண் வெட்டி விட்டார். இதில் படுகாயத்துடன் அங்கிருந்து தப்பித்து தெருவிற்கு வந்த 44 வயது நபர் உடனே தனது மகன் மற்றும் சகோதரனுக்கு போன் செய்து வரவழைத்தார்.

அவர்கள் அவரை அங்குள்ள தேசாய் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு உடனே டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸாரின் விசாரணையில் இருவரும் உறவினர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *