‘அ.ம.மு.க வேண்டாம்’ என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.

10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்” என்றனர்.
கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!