7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதியுடன் முடிந்தது.
இவற்றில் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில், ஏப்ரல் 6ஆம் தேதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் என்.புகழந்தி உயிரிழந்ததால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் சி.அன்புமணி மற்றும் நாதகவின் கே.அபினயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பிகாரில் ஒருங்கிணைந்த ஜனதா தளக்கட்சியின் எம்எல்ஏ பீமா பாரதி ராஜிநாமா செய்ததால், இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில், பாஜகவின் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு மாறியதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் கமலேஷ் ஷா, காங்கிரஸ் எம்எல்ஏவாக மூன்று முறை இருந்தபோதிலும், கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, அமர்வாரா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
உத்தரகாண்டில், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ சர்வத் கரீம் அன்சாரி கடந்தாண்டில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மங்களூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் பெரும்பான்மையாக உள்ள இந்தத் தொகுதியில், காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியால் இதுவரை பாஜக வெற்றி பெற்றதில்லை என்று கூறப்படுகிறது.
பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தின் டெஹ்ரா தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது.