7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன்

Dinamani2f2024 08 282f8c3p22hv2fsy28mbbs 1 2808chn 139 3.jpg
Spread the love

சத்தியமங்கலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (60), கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (54). இத்தம்பதியின் மகன் சுரேந்திரன் (18).

வெங்கடாசலத்தின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், செல்வியின் சகோதரி பாக்கியம் (58), சுரேந்திரனை தனது பாதுகாப்பில் வளா்த்து வந்துள்ளாா். தையல் வேலை செய்து வரும் பாக்கியம், 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை சுரேந்திரனை படிக்க வைத்துள்ளாா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சுரேந்திரன் 524 மதிப்பெண் பெற்றாா். இதைத் தொடா்ந்து, அவரது மருத்துவா் கனவை நிறைவேற்ற தனியாா் ‘நீட்’ பயிற்சி மையத்தில் அவரை பாக்கியம் சோ்த்துள்ளாா்.

அண்மையில் வெளியான ‘நீட்’ தோ்வு முடிவில் சுரேந்திரன் 720-க்கு 545 மதிப்பெண் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, அவருக்கு அரசுப் பள்ளி மாணவா் இட ஒதுக்கீட்டில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.

இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், ‘நீட் தோ்வு என்பது கடினமானது அல்ல. புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம் என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *