70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர்: தமிழக மின் வாரிய அதிகாரிகள் தகவல் | Tender for construction of new substations

1377398
Spread the love

சென்னை: தமிழகத்​தில் 33/11 கி.வோ திறனில் 70 புதிய துணை மின்​நிலை​யங்​கள் அமைக்க டெண்​டர் கோரப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் சீராக மின் விநி​யோகத்தை உறு​தி​செய்ய மின்​வாரி​யம் பலவேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. இந்​நிலை​யில் மத்​திய அரசின் மறு சீரமைக்​கப்​பட்ட மின் விநி​யோகத் திட்​டத்​தின் கீழ், ரூ.1,500 கோடி​யில்,133 புதிய துணை மின்​நிலை​யங்​கள் மற்​றும் ஏற்​கெனவே உள்ள துணை மின்​நிலை​யங்​களில், 52 பவர் டிரான்​ஸ்ஃ​பார்​மர்​களைப் பொருத்த திட்​ட​மிடப்​பட்​டது.

இந்த புதிய துணை மின்​நிலை​யங்​களை அமைக்க டெண்​டர் பணி​கள் முடிக்​கப்​பட்டு தற்​போது முதற்​கட்​ட​மாக 70 துணை மின்​நிலை​யங்​கள் அமைப்​ப​தற்கு டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் 33/11 கி.வோ திறனில் 133 துணை மின்​நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்ட நிலை​யில் அவை அமைய​வுள்ளசூழல், இட அமைப்​புக்கு ஏற்ப உட்​புற மற்​றும் வெளிப்​புற துணை மின்​நிலை​யங்​கள் என இரண்டு வகைகளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒரு வெளிப்​புற துணை மின்​நிலை​யம் அமைக்க ரூ.6 முதல் ரூ.7 கோடி​யும், உட்​புற துணை மின்​நிலை​யம் அமைக்க ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை ஆகும் என கணக்​கிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், 70 துணை மின்​நிலை​யங்​கள் அமைப்​ப​தற்​கான டெண்​டரை மின்​வாரி​யம் கோரி​யுள்​ளது. ஒப்​பந்​தப்​புள்​ளி​யில் நிறு​வனம் தேர்வு செய்​யப்​பட்ட உடன் பணி​களைத் தொடங்​கி, 6 மாதத்​துக்​குள் முடித்து பயன்​பாட்​டுக்​குகொண்​டு​வரத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதைத்​தொடர்ந்து மீத​முள்ள 63 துணை மின் நிலை​யங்​கள் அமைப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் கோரப்​படும். இந்த 133 துணை மின்நிலை​யங்​களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் பயன்​பாட்​டுக்கு வரும். கிராமப் பகு​தி​களில்,சிறு நகரங்​களில் வெளிப்​புற துணை மின்​நிலை​யங்​களும், மாநக​ராட்​சி, பெரு நகரங்​களில் உட்புற துணை மின்​நிலை​யங்​களும் அமைக்​கப்​படும் என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *