ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தடையிலிருந்து, சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன.