தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 7,783
பணி: அங்கன்வாடி பணியாளா்கள்
காலியிடங்கள்: 3886
தகுதி: அங்கன்வாடி மற்றும் சிறிய அளவிலான அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதந்தோறும் தலா ரூ.7,700 தொகுப்பூதியமாகவும், சிறிய அளவிலான அங்கன்வாடிகளில் பணியாற்ற 305 பணியாளா்களுக்கு ரூ.5,700 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
வயதுவரம்பு: 25 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், கணவனை இழந்தவா்கள், கைவிடப்பட்டவா்கள், தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 40 வயதுவரை தளர்வு வழங்கப்படும்.