8 மாதங்களாக மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது நிறுத்திவைப்பு | Approval of scholarships for the differently-abled has been suspended for 8 months

1373200
Spread the love

சிவகங்கை: ​மாற்​றுத் திற​னாளி உள்​ளிட்​டோருக்​கான உதவித்​தொகைக்கு ஒப்​புதல் கொடுப்​பது கடந்த 8 மாதங்​களாக நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் வரு​வாய்த் துறை​யின் சமூக பாது​காப்​புத் திட்​டம் மூலம் மாற்​றுத் திற​னாளி​கள், முதி​யோர், கணவ​ரால் கைவிடப்​பட்​டோர், முதிர்​கன்​னிகள் ஆகியோ​ருக்கு உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

தகு​தி​ உள்​ளோர் ஆன்​லைன் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். 2023 செப்​டம்​பரில் இருந்து மாதந்​தோறும் மாற்​றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், மற்​றவர்​களுக்கு ரூ.1,200-ம் உதவித்​தொகை​யாக வழங்​கப்​படு​கிறது. கடந்த 2 ஆண்​டு​களாக விண்ணப்​பித்​தவர்​களுக்​கு, முதலில் உதவித்​தொகை பெறு​வதற்​கான அனு​மதி ஆணை மட்​டும்வழங்​கப்​படு​கிறது.

பின்​னர் ஓராண்டு கழித்து உதவித்​தொகை வழங்​கப்​படு​கிறது. அது​வும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மட்​டுமே உதவித்​தொகை அனு​மதிக்​கப்​படு​கிறது. முதி​யோர் உள்​ளிட்ட மற்​றவர்​களுக்கு 2 ஆண்​டு​களுக்கு மேலாக வழங்​கப்​பட​வில்​லை.

மேலும், மாற்​றுத் திற​னாளிகளுக்கு கடந்த காலங்​களில் உதவித்​தொகை தாமத​மாக வழங்​கத் தொடங்​கி​னாலும், ஆணை பெற்ற மாதத்​தில் இருந்து நிலு​வைத்​தொகை​யும் கணக்​கிடப்​பட்டு வழங்​கப்​பட்​டது. ஆனால், தற்​போது நிலு​வைத்​தொகை​யும் வழங்​கு​வ​தில்​லை. இதனால் உதவித்​தொகைக்கு விண்​ணப்​பித்த பல்​லா​யிரக்​கணக்​கானோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து மாற்​றுத் திற​னாளி​கள் சங்​கத்​தினர் கூறிய​தாவது: ஓராண்​டுக்கு முன் விண்​ணப்​பித்​த​போது, விண்​ணப்​பத்தை ஆய்​வு செய்​து, உதவித்​தொகை பெறு​வதற்​கான ஆணையை முதலில் வழங்​கினர். அந்த ஆணை பெற்ற பலர் உதவித்​தொகைகிடைக்காமல் காத்​திருக்​கின்​றனர். கடந்த 8 மாதங்​களாக விண்​ணப்​பித்​து​விட்​டு, ஆணைக்​காகவே காத்​திருக்​கும் நிலையும் உள்​ளது. வட்​டாட்​சி​யர் அலு​வல​கங்​களில் கேட்​டால், கிராம நிர்​வாக அலு​வலர் ஒப்​புதல் கொடுக்​க​ வில்லை என்கின்றனர்.

கிராம நிர்​வாக அலுவலரிடம் கேட்​டால், ஒப்​புதல் கொடுக்​கும் ‘ஆப்​ஷனை’ நிறுத்தி வைத்துள்​ள​தாக கூறு கிறார். இதனால் மாற்றுத் திற​னாளி​கள் மட்​டுமின்றி முதி​யோர் உள்​ளிட்​டோர் உதவித்​தொகைக்​காக அலைந்து வருகின்​றனர். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இதுகுறித்து வரு​வாய்த் துறை​யினரிடம் கேட்​ட​போது, “கி​ராம நிர்​வாக அலு​வலர் விண்​ணப்​பங்​களுக்கு ஒப்​புதல் கொடுக்​கும் ‘ஆப்​ஷனை’ நிறுத்தி வைத்​துள்​ளனர். ஓராண்​டுக்கு முன் ஆணை பெற்​றவர்​களுக்கு மட்​டும் அவ்​வப்​ போது உதவித்​தொகை வழங்க அனு​மதி கொடுக்​கின்​றனர். அது​வும்​ மே மாதத்​துக்​கு பிறகு அனு​ம​தி வரவில்​லை” என்றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *