முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் இருவரும் 80 வயதை தொட்டிருப்பதையடுத்து, அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இன்று சென்னையில் மதிய விருந்தளிக்கப் பட்டது.
ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் இருவருக்குமே தற்போது 79 முடிந்து 80 வது வயது தொடங்குகிறது.
இதையொட்டி இவர்களது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இதை செலிபிரேட் செய்யும்விதமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் சிலருக்கு மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இன்று மதியம் நிகழ்ந்த இந்த விருந்து விழாவுக்கு ப.சியின் குடும்பத்தினர், அவரது சகோதரி குடும்பம் மற்றும் நெருங்கிய செட்டி நாட்டுச் சொந்தங்கள் கலந்து கொண்டனர்.
தவிர நடிகர்கள் சிவக்குமார், கவிஞர வைரமுத்து, வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பிரபலங்களும் வருகை தந்தனர்.