80-year-old female doctor leaves behind Rs 60 crore property without heirs: Heirs stake claim | வாரிசு இல்லாமல் ரூ.60 கோடி சொத்தை விட்டுச்சென்ற 80 வயது பெண் டாக்டர்: உரிமை கொண்டாடும் வாரிசுகள்

Spread the love

ரூ.60 கோடி நிலம்

டாக்டர் ஹேமலதா இறந்தவுடன் சொத்து பிரச்னை பெரிதாகும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இறுதிசடங்கை முன்னின்று நடத்தியது. ஹேமலதாவிற்கு ஜபல்பூரின் மத்திய பகுதியில் 11 ஆயிரம் சதுர அடி நிலம் இருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.60 கோடியாகும். டாக்டர் ஹேமலதா உயிரோடு இருந்தபோது அந்த சொத்தை யாருக்கும் எழுதிக்கொடுக்கவில்லை. அவர் அந்த சொத்தை காயத்ரி மந்திர் டிரஸ்டிற்கு கொடுக்க விரும்பியதாக அந்த டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இதற்கு ஹேமலதாவின் இளைய சகோதரி கனக லதா ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம் ஹேமலதாவின் உடலை அவரது மற்றொரு சகோதரியான சாந்தி மிஸ்ராவிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்து இருக்கிறது.

அவரும் சொத்துக்கு உரிமை கோரி இருக்கிறார். இந்த பிரச்னை குறித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராகேவேந்திர சிங் கூறுகையில், “‘சம்பந்தப்பட்ட சொத்து மாநகராட்சியால் குத்தகைக்கு விடப்பட்டது ஆகும். எனவே அதனை யாரும் தானமாக எழுதிக்கொடுக்க முடியாது. ஹேமலதாவும் தானமாக கொடுக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இப்பிரச்னை மாவட்ட நீதிமன்றத்திடம் விடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அனைவரும் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கவேண்டும். அதன் அடிப்படையில் சொத்து யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கோர்ட் முடிவு எடுக்கும்”என்று தெரிவித்தார்.

கடந்த 2022ம் ஆண்டு ஹேமலதாவின் மகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹேமலதாவின் கணவரும் இறந்துவிட்டார். இரண்டு பேரும் இறந்ததால் அவரிடம் இருந்த சொத்து மீது அனைவரது கண்ணும் விழுந்தது. அவர்களது நிலத்தின் மதிப்பும் கடுமையாக அதிகரித்துவிட்டது. இப்போது அவரின் ரூ.60 கோடி மதிப்பு நிலம் மற்றும் அவர் வாழ்ந்த வீடு போன்றவற்றிற்கு இரண்டு சகோதரிகள், கோயில் டிரஸ்ட், டாக்டர் சுமித் உட்பட பலரும் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *