A boyfriend who sexually assaulted and murdered his girlfriend who had come to a birthdayparty with his friends-பிறந்தநாள்பார்ட்டிக்கு வந்த காதலியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்தகாதலன்

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு இரவு 11 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் சொன்னபடி இரவு 11 மணிக்குள் வீட்டிற்கு வரவில்லை. ஆனால் அதேநாள் இரவில் அம்மாணவியின் ஆபாச வீடியோ அவள் படிக்கும் கல்லூரி வாட்ஸ்ஆப் குரூப்பில் வெளியானது. அதில் அம்மாணவியின் முகம் தெளிவாக தெரிந்தது.

ஆனால் மற்றவர்கள் முகம் மறைக்கப்பட்டு இருந்தது. அந்த வீடியோவை கல்லூரி நிர்வாகம் உடனே குரூப்பில் இருந்து நீக்கிவிட்டது.

மறுநாள் காலையில் கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தனர். அந்நேரம் மாணவியின் போனும், பியூஷ் போனும் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து மாணவியின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். எனினும் போலீஸ் நிலையங்களில் காணவில்லை புகாரை பதிவு செய்ய மறுத்தனர்.

இறுதியில் ஒரு போலீஸ் நிலையம் மாணவியை காணவில்லை என்று புகாரை பதிவு செய்தது. அப்படி பதிவு செய்த பிறகு மாணவியை கண்டுபிடிக்க எந்த வித அவசரமும் போலீஸார் காட்டவில்லை என்று மாணவியின் தந்தை குற்றம் சாட்டினார். போலீஸார் பியூஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *