A man only needs 5 fingers; Vijay’s TRP is the sixth finger for Tamil Nadu says rajendra balaji-ஒரு மனிதனுக்கு 5 விரல்களே போதும்; தமிழகத்திற்கு விஜய்யின் த.வெ.க ஆறாவது விரலாக உள்ளது

Spread the love

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை நடந்து முடிந்த அரசியலில் பார்த்தால் ஒவ்வொரு நேரமும் தி.மு.கவும் படுதோல்வி அடைந்திருக்கிறது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தது.  டெபாசிட் இழந்த தி.மு.கவே ஆட்சிக்கு வருகிறபோது, 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார். எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியால்  மட்டுமே தர முடியும்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்.  தனித்து நின்றே வெற்றி பெறுவோம் என த.வெ.க தலைவர் விஜய் கூறுகிறார்.  உழைக்கும்  மனிதனுக்கு 5 விரல்கள்தான் தேவை, 6வது விரல் தேவையில்லை, தமிழகத்திற்கு விஜயின் த.வெ.க 6வது விரலாக உள்ளது.  தேர்தல் களத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளும், தி.மு.கவும் திமுக கூட்டணி கட்சிகளும் மட்டுமே நிற்கும். தேர்தல் அறிவித்தவுடன் மற்ற கட்சிகள் எல்லாம் கரைந்து காணாமல் போய்விடும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *