அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் (7 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்) எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டி ஒன்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேபோல, டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ஹர்பஜன் சிங் வலியுறுத்தல்
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றிக்கு அபிஷேக் சர்மா உதவிய நிலையில், அவர் இன்னும் அதிகமான ஓவர்கள் பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.