வங்காள தேசத்தில் உள்நாட்டு கலவரம் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கிருந்து இங்கிலாந்தில் குடியேறலாம் என்று கூறப்படுகிறது.
இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மகத்துவம்: மாநிலங்களவையில் திமுக எம்.பி பெருமிதம்
இன்று பதவி ஏற்பு
இந்த நிலையில் தற்போது வங்காளதேசத்தில் கலவரம் ஓய்ந்து உள்ளநிலையில் ராணுவத்தின் ஆதரவுடன் நாட்டின் இடைக்கால ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.இன்று இரவு அவர் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பொறுப்பேற்றுக்கொண்டர்.
16 ஆலோசகர்கள்
முகமது யூனுஸ்சுடன் மேலும் 16 ஆலோசகர்கள் பொறுப்பேற்று உள்ளனர். அவர்களது விபரம் வருமாறு:
1. சலேஹுதீன் அகமது
2. ஹசன் ஆரிப்
3. பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு)சகாவத் ஹுசைன்
4. தௌஹித் ஹொசைன்
5. ஆசிப் நஸ்ருல்
6. ஷர்மின் முர்ஷித்
7. அடிலுர் ரஹ்மான் கான்
8. சையதா ரிஸ்வானா ஹாசன்
9. சுப்ரதீப் சக்மா
10. ஃபரிதா அக்தர்
11. ஃபரூக்-இ-ஆசம்
12. பிதான் ரஞ்சன் ராய்
13. காலித் ஹசன்
14. நூர் ஜஹான் பேகம்
15.நஹித் இஸ்லாம்
16. ஆசிப் மஹ்மூத்.
அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும். வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் இன்னும் அங்கு கலவரம் ஓயவில்லை என்றே தெரிகிறது. இதைத்தொடர்ந்து முப்படை அதிகாரிகள் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் நாடு முழுவதும் நடைபெறும் கலவரம், கொலைகள் மற்றும் அழிவுச் செயல்களைத் தடுக்க ஆயுதப் படைகள் மற்றும் பிற சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் படைகள் மூலம் கடுமமையாக கடுவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மோடி வாழ்த்து
இதற்கிடையே வங்காள தேசத்தில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு குழப்பத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதற்கிடையே வங்காளதேசத்தின் இடைக்கா ஆலோசகர் முகமது யூனுஸ்சுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“புதிய பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் முகமது யூனுஸுக்கு நல்வாழ்த்துக்கள். அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பும், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்தை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துஉள்ளார்.