சயீப் அலிகான் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

E1 1737248969
Spread the love

நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில் சைஃப் அலிகான் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிக்க| சைஃப் அலிகானிடம் ரூ.1 கோடி கேட்ட குற்றவாளி! 20 தனிப்படைகள் அமைப்பு!

அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக நேற்று (ஜன. 17) மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சைஃப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், அவரை கத்தியால் குத்திய நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த பின் 3 நாட்கள் கழித்து அவர் மும்பை போலீசாரிடம் தானேவில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெயர் விஜய் தாஸ் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

மேலும் அவர் போலீசாரை ஏமாற்ற முயன்றுள்ளார். அதாவது போலீசாரிடம் அவர் சிக்கிய பிறகு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வேளையில் அவர் தனது பெயரை மாற்றி மாற்றி கூறியுள்ளார். முதலில் பிஜோய் தாஸ் என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு தனது பெயரை முகமது சஜித் என்று கூறியுள்ளார். இறுதியாக போலீசார் அவரது பெயர் விஜய் தாஸ் என்று தெரிவித்துள்ளனர். இவர் ரெஸ்ட்டாரண்ட்டில் வெயிட்டராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

முன்னதாக நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் தொடர்புடையவர் என்று சந்தேகப்பட்டு நேற்று சத்தீஸ்கர் துர்க் ரயில் நிலையத்தில் ஒருவரை ரயில்வே போலீசார் பிடித்தனர். மும்பை எல்டிடி பகுதியில் இருந்து கொல்கத்தா சாலிமர் செல்லும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது அவர் சிக்கினார்.

அந்த நபரின் பெயர் ஆகாஷ் கைலாஷ் கனோஜியா (வயது 31) என்பது தெரியவந்தது. இவர் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக தகவல்கள் பரவியது. ஆனால் போலீசார் அப்படி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் தான் ஆகாஷ் கைலாஷ் கனோஜியாவிடம் விசாரிக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *