சாலை தடுப்பில் பைக் மோதி 2என்ஜீனியர்கள் பலி- தலை துண்டானது

Img 20241222 Wa0011
Spread the love

மதுபோதையில் பைக்கில் சென்ற ஐடி ஊழியர்கள், சாலைத் தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னை, பெருங்குடியில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்களான கேரளத்தைச் சேர்ந்த விஷ்ணு (24), பம்மலைச் சேர்ந்த கோகுல் (24) இருவரும் மது அருந்திவிட்டு, இன்று அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளிகரணை அருகே அதிவேகமாகச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஆதிபுரிஸ்வரர் கோயில் அருகே சென்றபோது, நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, அவர்களின் இருவரது உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *