சென்னை:
இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
34 ரன்னுக்கு 3 விக்கெட்
கேப்டன் ரோகித்சர்மா 6 ரன்னிலும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமலும், வீராட் கோலி 6 ரன்னிலு அடுத்தடுத்து ஹசன் முகமது பந்தில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசிடம் கேட்ச்கொடுத்து அவுட்டானார்கள். இதனால் இந்திய அணி 34 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால்-ரிஷப்பன்ட் ஜோடி ஓரளவு தாக்குபிடித்து விளையாடியது. இதுவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஜெய்ஸ்வால் 56 ரன்னிலும், ரிஷப்பன்ட் 39 ரன்னிலும், அடுத்துவந்த கே.எல்.ராகுல் 16 ரன்னிலும் அவுட்டானார்கள். இந்தியா 144 ரன்னுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் காணப்பட்டது.
அஸ்வின் அதிரடி சதம்
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த தமிழக வீரர் அஸ்வின்- ரவீந்திர ஜடோஜா ஜோடி சிறப்பாக விளையாடியது. வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகளாக அடித்து நொறுக்கினர். மேலும் ஏதுவான பந்துகளில் ஒன்று, இரண்டு ரன்கள் எடுத்து ரன்னை ஜெட்வேகத்தில் உயர்த்தினர்.
இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. மேலும் அஸ்வின் அபாராமாக விளையாடி சதம் விளாசினார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை அஸ்வின் பதிவு செய்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (167) குவித்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்தது அஷ்வின் -ஜடேஜா ஜோடி. அஸ்வின் சென்னை மைதானத்தில் தனது 2-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து உள்ளார்.
காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்குப் பதிலாக பேனாவும், புத்தகமும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
இந்திய அணி 339/6
ஜடோஜாவும் 117 பந்துகளில் 82 ரன் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். முதல் நாள் போட்டி முடிவில் இந்திய அணி 339/6 ரன்களை குவித்து உள்ளது.வங்கதேச அணியில் ஹசன் முகமது 4 விக்கெட்டும், ரானா, மெஹிதி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்து உள்ளனர். நாளை(20-ந்தேதி) 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.