மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

Rajinikanth230524 1
Spread the love

வாழை திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில்,

மாரி செல்வராஜினுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் நீண்ட நாளுக்குப் பிறகு வந்துள்ளது.

Dinamani2f2024 09 022fg8xztypp2frajinikanth20mari20selvaraj20edi.jpg

மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கெஜ்ரிவால் தனி செயலருக்கு ஜாமின்: முதல்வர் வீட்டிற்குள் நுழையக்கூடாது என நிபந்தனை

கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்.

மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பாட்மின்டனிலிருந்து ஓய்வு பெறுகிறாரா சாய்னா நேவால்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *