சென்னை:
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இருவேடங்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்து உள்ளனர்.
பிரேமலதாவுடன் சந்திப்பு
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தி கோட் படத்தன் டிரைலர் வெளியானது. 2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள டிரைலர் இணையத்தில் வைரலாகி சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தல் ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் காட்சி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் அனுமதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் பிரேமலதாவை நடிகர் விஜய் இன்று சந்தித்தார். அப்போது விஜய் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இயக்குனர் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜயகாந்தின் 2 மகன்கள் உடன் இருந்தனர்.
கட்சி கொடி
இதற்கிடையே நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடிய வருகிற 22&ந்தேதி அறிமுகம் செய்கிறார். இதற்கு முன்னோட்டமாக இன்று மாலை நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்மாதிரி கொடி ஒன்றை ஏற்றினார். அந்த கொடி முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. நடுவில் விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியின் நிறம் மஞ்சளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.