பாரீஸ்:
பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. இதில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் பெற்று உள்ளது.
இதில் நடைபெற்ற 50 கிலோ மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஆனால் அவர் திடீரென கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டர்.
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். முதலில் இந்த வழக்கு தீர்ப்பு ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்கு முன்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தீர்ப்பு இன்று (13-ந்தேதி) இரவு 9.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
16-ந்தேதி ஒத்திவைப்பு
அதன்படி வினேஷ் போகத்தின் தரப்பு வாதங்களை கேட்ட நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை 3-வது முறையாக ஒத்தி வைத்து உள்ளது.வினேஷ் போகத் விவகாரத்தில் தீர்ப்பை வருகிற 16-ந்தேதி இரவு 9.30 மணிக்கு வழங்குவதாக விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இதனால் வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா? என்பதை அறிய மேலும் 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.