பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று(ஜூலை 4) வீடு திரும்பினார்.
எல்.கே. அத்வானி(96), எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில், அவர் அப்போலோ தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மூத்த நரம்பியல் மருத்துவா் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் அவா் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.