AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

Spread the love

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப உலகில் ‘செயற்கை நுண்ணறிவு’ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாக இருந்தாலும், அதன் தாக்கம் குறித்தும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

‘செயற்கை நுண்ணறிவு’ பலரின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகவும், போலியான தகவல்களை உருவாக்குவதாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதே தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.

AI
AI

தாத்தாவுக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசு

தனது தாத்தாவின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மறக்க முடியாத ஒரு பரிசைக் கொடுக்க விரும்பிய பேரன், AI தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளார்.

தாத்தாவின் இளமைக்கால புகைப்படங்கள், மறைந்த உறவினர்களின் படங்கள் மற்றும் பழைய நினைவுகளைச் சேகரித்த அவர், அவற்றை வெறும் புகைப்படங்களாகக் காட்டாமல், வீடியோ காட்சிகளாக மாற்றியுள்ளார்.

பழைய புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் புகைப்படங்களில் உள்ள முகங்களுக்கு உயிர் கொடுத்து, அவை அசைவது போலவும், சிரிப்பது போலவும் மாற்றியமைத்துள்ளார். இந்த வீடியோ தொகுப்பைத் தனது தாத்தாவுக்குப் பிறந்தநாள் பரிசாக அவர் திரையிட்டுக் காண்பித்துள்ளார்.

தனது வாழ்நாளில் மீண்டும் பார்க்கவே முடியாது என்று நினைத்த முகங்கள், கண்முன்னே உயிருடன் அசைவதைப் பார்த்த முதியவர், திகைத்துப் போய் நெகிழ்ந்துள்ளார்.

வைரலாகும் வீடியோவின்படி தனது தாய் மற்றும் சகோதரர் உயிருடன் இருப்பதைக் கண்டபோது, அவரால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்த தாத்தா மட்டுமல்லாது, அங்கிருந்த முதியவரின் குடும்பத்தினர் பலரும் கண்ணீர் வடித்தனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோதான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ ‘generativeai_official’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *