மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம், இன்று காலை மகாராஷ்டிராவின் பரமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் பவாருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அவரின் நிலை குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலும் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான காட்சிகளில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக்கிடப்பதும், அதிலிருந்து தீப்பிழம்புகளும் அடர்த்தியான புகையும் வெளியேறுவதும் காணப்படுகிறது.
An aircraft carrying Maharashtra Deputy CM Ajit Pawar faced a crash landing while landing at Baramati airport.
Sending prayers for his speedy recovery and well-being.#AjithPawar #MaharashtraNews
— (@SharfExcel) January 28, 2026
மகாராஷ்டிர அரசியலில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சராக ஐந்து முறைக்கும் மேல் பதவி வகித்தவர். நிதியமைச்சர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளைத் திறம்பட கையாண்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. விபத்தின் கோரக்கட்சிகள் வெளியான நிலையில், அஜித் பவார் மரணமடைந்துட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.