போர்ச்சுக்களில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட்ட தொடர் 2025-ல் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் குழு அடுத்ததாக கலந்து கொள்ள உள்ளது. இதற்காக ரேசிங்க பயிற்சியாளர் மாத்யூ «ட்ரியை போர்ச்சுக்கல் சென்று அஜித் நேரில் சந்தித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போட்டிகள் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகின்றன.
நடிகர் அஜித் பயிற்சியாளரை சந்தித்த புகைப்படத்தை அஜித்தின் குழுவினர் பகிர்ந்து உள்ளனர். அதல் அஜித்தின் கார் பந்தய பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் மாத்யூ பொறுப்பேற்றுள்ளார் என்று பதிவிட்டு உள்ளனர்.
துபையில் நடைபெற்ற 24 ஹெச் கார் பந்தயத்தின் போது பந்தய சீசன் முடியும் வரை எந்த படங்களிலும் கையெழுத்திடப் போவதில்லை என்றும், கார் பந்தய சீசன் தொடங்குவதற்கு முன்பு அக்டோபர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிப்பேன் என்றும் அஜித் கூறியிருந்தார்.
அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப். 6 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ ஏப்ரல். 10 அன்று வெளியாகவுள்ளது.
கார் ரேஸ் மற்றும் திரைப்படம் தொடர்பாக அஜித் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.