தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 21 பெண் ஊழியர்கள் மயக்கம்

Dinamani2f2024 072f12b7795a Cf12 4ac7 89e1 Eb45192721672fses20foods20pvltd.jpg
Spread the love

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அந்த ஆலையில் திடீரென அமோனியா வாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த ஆலை முழுவதும் அமோனியா வாயு பரவியதால், அங்கு பணியில் இருந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என மொத்தம் 21 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரையும் மீட்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *