(அ) நிருபர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்காணும் 7 தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, சொந்தக் கையெழுத்தில், தெளிவாகத் தமிழில் 4 பக்கங்களுக்குள் கட்டுரை எழுதி, அதை விண்ணபத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இணைய தளம் அல்லது பிற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதக் கூடாது.
1. பழைய படங்கள் தியேட்டரில் ரீ-ரிலீஸ் ஆவதுதான் தற்போதைய டிரெண்ட். இது ஆரோக்கியமானதா அல்லது புதிய படங்களுக்கு ஆபத்தா? இது பற்றி உங்கள் கருத்து என்ன…
2. வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், பிரதான அரசியல் கட்சிகளுக்கு காணப்படும் ப்ளஸ், மைனஸ் அம்சங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதவும்.
3. பேருந்தில் தன்னைப் பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு பெண் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வியூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சமூக வலைதளங்களில் எந்த எல்லைக்கும் போவது சரியா? இதனால் ஏற்படும் தாக்கம் பற்றி எழுதுங்கள்.
4. இயற்கை எழில், வரலாற்றுத்தலம், திருவிழா, பாரம்பர்ய பழக்கம் என உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு ‘அட!’ போடவைக்கும் விஷயத்தைப் பற்றி எழுதவும்.
5. உங்கள் மாவட்டத்திலுள்ள ஒரு வணிக வெற்றியாளர் பற்றியும், அவர் தொழிலில் வெற்றியடைந்த கதையையும் எழுதவும். டிப்பார்ட்மென்ட்டல் ஸ்டோர் முதல் டெக் சொல்யூஷன்ஸ் வரை எந்தத் துறையைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
6. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பைக்கை ஆன்ரோடு விலை 65,000 ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இப்போது எந்த பைக்கையும் 1 லட்சத்துக்குக் குறைந்து வாங்க முடிவதில்லை. ஏன் இந்த விலையேற்றம்… இது குறித்து எழுதவும்.
7. உங்கள் சுற்றுப்புறத்தில் விவசாயம், ஆடு கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு உரம் என்று வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுவரும் ஒருவரைச் சந்தித்து, மூலப்பொருள்கள், செய்முறை, பராமரிப்பு, வருமானம், லாபம் என முழு விவரங்களுடன் ஒரு கட்டுரை எழுதவும்.
(ஆ) புகைப்படக்காரராக மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவர் கட்டுரை அனுப்பத் தேவையில்லை. ஆனால், சொந்தமாக டிஜிட்டல் கேமரா வைத்திருக்க வேண்டும். எதிர்வரும் நாள்களில், உங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக அல்லது வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு ஆன்லைன் விண்ணப்பத்தில் டிஜிட்டல் வடிவில் அப்லோடு செய்ய வேண்டும்.
(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்ய வேண்டும்.
(ஈ) வீடியோ எடிட்டர் பிரிவுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே நீங்கள் எடிட் செய்த வீடியோக்கள் சிலவற்றின் லிங்க்குகளை (Link) ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
(உ) நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 90 விநாடிகளுக்கு ஒரு ரீல் செய்ய வேண்டும். உங்களுக்குப் பிடித்த பிரபலம், உங்கள் ஊரிலுள்ள சுற்றுலாத்தலங்கள், இப்படி ஏதாவது ஒரு டாபிக்கை எடுத்து, அதை ரீலாகச் செய்ய வேண்டும். ரீல் விறுவிறுப்பாகவும் சுவராசியமாகவும் இருத்தல் அவசியம். ரீலை ஆன்லைன் விண்ணப்பத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.
(ஊ) மார்க்கெட்டிங் ட்ரெய்னி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்காணும் கேள்விக்கான பதிலை 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும்.
தற்போது விகடன் நடத்திவரும் சினிமா விருதுகள், நம்பிக்கை விருதுகள், அவள் விகடன் விருதுகள், சின்னத்திரை விருதுகள், டிஜிட்டல் விருதுகள்போல, அடுத்து என்ன நிகழ்ச்சி நடத்தலாம்… மேலும், அந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய நீங்கள் அணுக விரும்பும் ஒரு பிராண்ட் எது… அந்த பிராண்டை சம்மதிக்கவைக்க நீங்கள் சொல்லும் ஸ்மார்ட்டான மூன்று காரணங்களைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.
விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 31.03.2026-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது. அடுத்தகட்டமாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். முதற்கட்டத்தில் தேர்வுபெறும் மாணவர்கள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள். எங்களிடமிருந்து அழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள்,
முதற்கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.