இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல்.
2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன்பிறகு தொடர்ந்து 12 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2026ம் ஆண்டுக்கான சீசனில் ரசலை ஏலத்திற்காக வெளியிட்டது கேகேஆர் அணி நிர்வாகம். இதனால் அவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிற அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் பயிற்சியாளராக கேகேஆரில் தொடர்வதாக தனது புதிய பயணம் குறித்தும் பேசியுள்ளார்.
மேலும், “எனக்கும் வெங்கி மைசூருக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நிறைய உரையாடல்கள் நடந்துள்ளன, இது எனது ஐபிஎல் பயணத்தின் மற்றொரு அத்தியாயம் பற்றியது. அவர்கள் எனக்கு அன்பும் மரியாதையும் கொடுத்துள்ளனர், மேலும் நான் மைதானத்தில் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதைப் பாராட்டுகிறார்கள். பழக்கமான ஒரு அமைப்பில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியம்.
கொல்கத்தா, நான் திரும்பி வருவேன். 2026 ஆம் ஆண்டில் புதிய பவர் பயிற்சியாளராக KKR ஆதரவு ஊழியர்களில் ஒருவராக இருப்பேன்.”எனக் கூறியுள்ளார்.
Andre Russell
ஐபிஎல்லில் 140 போட்டிகள் விளையாடியிருக்கும் ரசல், 174.18 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 2651 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 123 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐபிஎல்லின் Most Valuable Player விருதை வென்றிருக்கிறார்.