Anganwadi worker saves 20 children from bee stings, dies from bee stings herself | 20 குழந்தை காப்பாற்றிவிட்டு தேனீக்களின் கடியில் உயிரிழந்த அங்கன்வாடி பெண் ஊழியர்

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் திடீரென நூற்றுக்கணக்கான தேனீக்கள் அங்கன்வாடிக்குள் நுழைந்து குழந்தைகளை தாக்க ஆரம்பித்தது.

இதனால் குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். உடனே சமையல் அறையில் இருந்து ஓடி வந்த கஞ்சன் பாய் அங்கு கிடந்த தார்பாயை எடுத்து குழந்தைகளின் உடலில் சுற்றி ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வந்து விட்டார். ஆனால் கஞ்சன் பாயை தேனீக்கள் கொட்டிக்கொண்டிருந்தது.

அதனைப்பற்றி கவலைப்படாமல் 20 குழந்தைகளையும் அவர் பத்திரமாக வெளியில் கொண்டு வந்து விட்டார். அதன்பிறகு அவர் தேனீக்களின் கடியால் அப்படியே மயங்கிவிழுந்தார். சத்தம் கேட்டு, கிராம மக்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் கஞ்சன் பாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துபோனார். அவரது உடம்பு முழுவதும் தேனீக்கள் கடித்திருந்த தடம் இருந்தது. கஞ்சன் பாய் உடல் மருத்துவமனையில் இருந்து கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டபோது ஒட்டுமொத்த கிராமத்தினரும் அமைதியுடன் இரங்கல் தெரிவித்தனர். அங்கன்வாடி அருகில் உள்ள மரத்தில் இருந்து தேனீக்கள் வந்தாக கூறப்படுகிறது.

கஞ்சன் பாய் அங்கன்வாடி சமையல்காரராக மட்டுமல்லாது மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தலைவராகவும் இருந்தார். அவரது துணிச்சலான செயலை கிராம மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். கஞ்சன் பாய் கணவருக்கு பக்கவாதம் வந்துள்ளது. இதனால் கஞ்சன் பாய்தான் தனது குடும்பத்தை கவனித்து வந்தார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *