இசையின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருப்பவர் அனிருத்.
கடைசியாக ‘கூலி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது இசையில் ‘எல்.ஐ.கே’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சிம்புவின் ‘அரசரன்’, லோகேஷ் நடிக்கும் ‘டிசி’, ‘ஜெயிலர் -2’, ஷாருக் கானின் ‘கிங்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அனிருத் “Albuquerque Records’ என்ற புதிய இசை லேபிள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் அனிருத், “ ‘Albuquerque Records’ மூலமாக இசையை மையப்படுத்திய வியாபாரத்துறைக்குள் நுழைகிறேன்.