சர்தார் – 2 படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.
நடிகா் காா்த்தி நடிப்பில், இயக்குநா் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சா்தாா் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று ஒரு சண்டை காட்சியை திரைப்படக் குழுவினா், படமாக்கிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சண்டை கலைஞரான புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்த மு.ஏழுமலை (54), 20 அடி உயரத்தில் இருந்து திடீரென தவறி விழுந்தாா்.