Arasan Update: முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி; `மதுரை டு வடசென்னை’ – அசத்தலான செட்டப்vetrimaaran- silambarasan movie ‘arasan’ shoot updates

Spread the love

வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் “அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம். அதனைத் தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

மலேசியாவில்

மலேசியாவில்

‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமுத்திரகனி, கிஷோர் என ‘வடசென்னை’க்கான முகங்கள் தேர்வானார்கள். சமீபத்தில் மலேசியா சென்ற சிலம்பரசன், இன்னும் மூன்று நாட்களில் ‘அரசன்’ படப்பிடிப்பில் இணைவதை உறுதிப்படுத்தினார்.

வெற்றி மாறன்

வெற்றி மாறன்

அதன்படி நேற்று எளிமையான முறையில் படப்பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (9ம் தேதி) படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. முன்னதாக வெற்றிமாறனும் அவரது யூனிட்டும் சில வாரங்களுக்கு முன்னரே கோவில்பட்டி பகுதிகளில் லொக்கேஷன்களை பார்த்துத் திரும்பினார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *