ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்துவரும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று (ஆக. 9) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.
மேலும், இப்போராட்டத்தில் இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் தீனா உள்ளிட்ட 1500 பேர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குநர் பா. இரஞ்சித் உள்ளிட்ட 1500 மீது, அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.