ஆசியா கோப்பைக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நாளை(19-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.
8 அணிகள் பங்கேற்பு
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளமும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா,தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் மோதல்
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலு முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதன்படி இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை (19-ந்தேதி) பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டி மாலை 7 மணிக்கு நடக்கிறது. நாளை நடைபெறும் மற்றொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- நேபாளம் அணிகள் மதியம் 2 மணிக்கு பலப்பரீட்சை நடத்து கின்றன.
28-ந்தேதி இறுதி போட்டி
இதைத்தொடர்ந்து இந்திய அணி 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 23-ம் தேதி நேபாளத்தையும் எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதி போட்டி வருகிற 26- ந்தேதி மதியம் 2 மணிக்கும், 2-வது அரையிறுதி போட்டி அதே நாளில் இரவு 7 மணிக்கும் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி வருகிற 28-ந்தேதி இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது. போட்டிகள் அனைத்தும் இலங்கையின் தம்புல்லாவில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
பெண்கள்கிரிக்கெட் போட்டி முழுஅட்டவணை…இங்கே கிளிக் செய்யவும்
டி20 இந்திய அணிக்கு சூர்யகுமார்யாதவ் கேப்டன்