குஜராத்:
பணக்கார கிராமமா…அது கண்டிப்பாக நம் நாட்டில் இருக்காது என்று நினைக்க தோன்றும்…ஆனால் இது தவறு. ஆசியாவின் பணக்கார கிராமம் குஜராத்தில் உள்ளது. இதனை கேட்கவே மலைப்பாக இருக்கிறதா… இதனை பற்றி பார்ப்போம்…
பணக்கார கிராமம்
குஜராத் இந்தியாவின் மிகச்சிறந்த வணிக மையங்கில் ஒன்றாக திகழ்கிறது. நாட்டின் தலைசிறந்த தொழிலதிபர்களை அது உருவாக்கியுள்ளது. செல்வ செழிப்பு, வளர்ச்சி, அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை நகரங்களில் மட்டும் இருக்கும் என்ற நிலை மாறி தற்போது கிராமங்களும் வேகமாக முன்னேறி வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக குஜராத் மாநிலம் கட்ச் மவாட்டத்தில் உள்ள மதாபர் கிராமம் தான் தற்போது முழு ஆசியாவின் பணக்கார கிராமம் என்று அறியப்படுகிறது.
கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இங்கு பொருளாதார செழிப்பு குறையே கிடையாது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ரூ.7 ஆயிரம் கோடி நிலையான வைப்புத் தொகை வைத்திருக்கிறார்கள், இதனை வைத்து அவர்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்பதை காணமுடியும்.
மதாபர் கிராமத்தில் படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு கடந்த 2011&ம் ஆண்டு மக்கள்தொகை சுமார் 17 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது 32 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது,
மேலும் இந்த கிராமத்தில் போட்டி போட்டி வங்கிகள் தங்களது கிளைகளை திறந்து வருகின்றன. அதிக அளவு பணம் டெபாசிட்ட செய்யப்படுவதால் தான் வாடிக்கையாளர்களை பிடிக்க இத்த¬ போட்டி.
HDFC வங்கி, SBI, PNB, Axis Bank, ICICI வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்ற முக்கிய பொது மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 17 வங்கிகள் இங்கு உள்ளன. இத்தனை வங்கிகள் ஒரு கிராமத்தில் இருப்பது அசாதாரணமானது. இருந்தபோதிலும் மேலும் பல வங்கிகள் தங்கள் கிளைகளை இங்கு திறக்க ஆர்வமாக உள்ளன.
20 ஆயிரம் வீடுகள்
இத்தனை செழிப்புக்கு காரணம் வெளிநாடுகளில் வசிக்கும் (என்.ஆர்.ஐ) இந்த கிராமமக்கள் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கோடிகளை டெபாசிட் செய்கிறார்கள். கிராமத்தில் சுமார் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன, ஆனால் சுமார் 1,200 குடும்பங்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளிலும், மத்திய ஆபிரிக்காவிலும் கட்டுமானத் தொழில்களில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதேபோல் பலர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்திலும் வாழ்கின்றனர் பணத்தை சம்பாதித்து கொட்டி வருகிறார்கள்.
கிராமமக்கள் வெளிநாட்டில் வேலை செய்தாலும், அவர்கள் தங்கள் கிராமத்துடன் உள்ள பாசப்பிணைப்பை மறக்காமல் இணைந்தே இருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் வசிக்கும் இடத்தை விட தங்களது கிராமத்தில் உள்ள வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய விரும்புகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, எங்கள் கிராமத்தில் குடிநீர், சுகாதாரம், சாலை என அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. பங்களாக்கள், பொது மற்றும் தனியார் பள்ளிகள், ஏரிகள் மற்றும் கோவில்கள் முழுவதும் வசதியுடன் மாறிவிட்டன என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் கொடிப் பாடல்