அதேசமயம், இன்னும் 4 டெஸ்ட் போட்டிகள் இத்தொடரில் மீதமிருப்பதால், ஸ்டோக்ஸ் மீண்டு வந்து 25 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தை ஆஷஸ் தொடரை வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது படர்கிறது.
அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 4-ம் தேதி பிரிஸ்பெனிலுள்ள கப்பா மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட்டில் தோற்றதால் தன்மீது விழுந்த விமர்சனங்கள் தொடர்பாக ஸ்டோக்ஸ் மவுனம் கலைத்திருக்கிறார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டோக்ஸ், “எங்களை மோசம் என்றுகூட சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி சொல்லிக்கொள்ளுங்கள்.
நாங்கள் எதிர்பார்த்த டெஸ்ட் போட்டி அமையவில்லை. அப்போட்டியில் சில கட்டங்களில் நாங்கள் முன்னிலையில் இருந்தோம். ஆனால், ஆணவம் என்று சொல்வது கொஞ்சம் அதிகம்.
இருந்தாலும் பரவாயில்லை, மென்மையானதுடன் கடினமானதையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம்.
மோசம் என்று சொன்னால்கூட ஓரளவுக்குப் பரவாயில்லை, ஆனால் ஆணவம் என்று சொன்னால் அது அவ்வளவு உறுதியாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
கடைசியாக 2015-ல் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற 4 தொடர்களில் ஒரு தொடரைக்கூட கைப்பற்றவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடரை ஆஸ்திரேலியா வென்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற 2 தொடர் டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.