‘Authority பேசும் திமுக அரசு, ஏன் தமிழில் கேள்வி கேட்கவில்லை?’-எஸ்.ஐ. தேர்வு குறித்து இபிஎஸ்| “An authority-talking DMK government – why didn’t it ask questions in Tamil?” – EPS on the SI examination.

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எஸ்.ஐ., தேர்வு குறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையின் போது, `தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?” என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

“எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா?

மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை? `எங்கும் தமிழ்’ என்பது வாயளவுக் கொள்கை தானா? `எதற்கு தமிழ்?’ என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா? மு.க ஸ்டாலின்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *