கதை சொல்லிட்டாரு, ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இன் ஃபேக்ட் அந்த டைம்ல டுயல் ரோல் ஒரு ஹீரோயினுக்கு கிடைக்குதுன்னா மிகப் பெரிய விஷயமா நான் நினைக்கிறேன். கதை போகும்போது நான் சொல்றேன் சார் கிட்ட, “சார் என்ன நம்பிக்கையில என்கிட்ட இந்த கதை சொல்றீங்க? யாருமே ஆறு மாசம், எட்டு மாசம் வரையும் நடக்கவே முடியாதுன்னு சொல்றாங்க. நீங்க வந்து என்ன நம்பிக்கையில இந்த கதை என்கிட்ட சொல்றீங்க?” அப்படின்னு சொன்ன உடனே, அவர் ஒரு விஷயம் தான் சொன்னார், “அதெல்லாம் நடந்துடுவீங்கம்மா. நம்ம சூப்பரா ஒரு படம் பண்றோம்” அப்படின்னு சொல்லிட்டு போனார். அந்த கான்பிடன்ஸ் தான். ஆறு மாசம், எட்டு மாசம்னு சொன்ன டாக்டர் முன்னாடி, ஒன்னரை மாசத்துல நான் ஷூட்டிங் போனேன்.

இங்க விருது வாங்கியிருக்கிற எல்லா பெண்களுக்கும் நான் வந்து கங்கிராஜுலேட் பண்ணனும்னு நினைக்கிறேன். ஏன்னா ஓவர்நைட் நடக்கிறது இல்ல சக்சஸ்ன்ற விஷயம். நிறைய வலிகள், நிறைய தோல்விகள், நிறைய பிரச்சனைகள், நிறைய போராட்டங்கள் தாண்டிதான் இன்னைக்கு இந்த மேடையில வந்து ஒவ்வொருத்தங்களும் அவார்ட் வாங்குறாங்க. எனக்கும் அந்த மாதிரி நிறைய நடந்திருக்கு. நிறைய போராட்டங்களை மீறி தான் இன்னைக்கு வந்து இந்த மேடையில நிக்கிறேன் நான் நம்புறேன்.