அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக வித்திட்டார். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை, குடிசைப் பகுதி மக்களுக்கான பட்டா உரிமை, பெண்கள் பாதுகாப்பு என… இவர்களது இருட்டையெல்லாம் எரிக்க நாட்டின் எந்த மூலையிலும் தினம் தினம் உதித்துக் கொண்டிருக்கும் நெருப்புப் புயல்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சமூக செயற்பாட்டாளர்கள் மன்மோகி, கீதா இழங்கோவன், அருண் மொழி ஆகியோர் கைகளால் விருதுபெற்றார் கீதா ராமகிருஷ்ணன்.
விருதுபெற்ற கீதா ராமகிருஷ்ணன், “விருது பெறும் இந்த வேளையில் நாங்கள் எல்லோரும் கடுமையான வருத்தத்தில் இருக்கிறோம். நேற்றிலிருந்து ஒன்றிய அரசு தொகுப்பு சட்டங்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். ஆனால் இதன் மூலம் நாம் போராடி பெற்ற சட்டங்களை ரத்து செய்துள்ளனர். 44 சட்டங்களை ரத்து செய்துள்ளனர். இதில் நாம் போராடி பெற்ற கட்டட தொழிலாளர் சட்டமும் ஒன்று. கட்டட தொழிலாளர் சட்டத்தின் மூலம்தான் எல்லா மாநிலத்திலும் தொழிலாளர் நல வாரியங்களை அமைக்க முடிந்தது.