சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது அவள் விகடன். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அவள் விருதுகள் நிகழ்ச்சி இன்று (நவம்பர் 22) மாலை சென்னையில் நடைபெறவுள்ளது.
