அப்போது, “ஏ.வி.எம் மூன்று எழுத்துகள் இருப்பது போல, பணிவு, பண்பு, ஒழுக்கம் – இவையெல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தது போல வாழ்ந்தவர் ஏ.வி.எம் சரவணன். அவர் கைக் கட்டி கொண்டு நின்றாலும் கூட, நமக்கு அவர் மீது மரியாதையும் பயமும் ஏற்படும்.
அதுபோன்ற ஒரு மாபெரும் மாமனிதர் அவர். இன்று கூட அவரின் மறைவு செய்தி எனக்கு கிடைத்த போது, ‘3:30 மணிக்கு இறுதி மரியாதை’ என குறிப்பிட்டிருந்தார்கள்.
அவருக்கு ‘இறுதி மரியாதை’ என ஒன்று கிடையவே கிடையாது. அவருக்கு எப்போதும் மரியாதைதான். அதற்கான காரணம் அவர் மட்டுமல்ல, அவரின் தகப்பனார் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரும்.

என்னைப் போன்ற கலைஞர்களுக்கு சினிமா தான் கடவுள் அப்படி என்றால் ஏ.வி மெய்யப்பச் செட்டியார், ஏ.வி.எம் சரவணன் கடவுளின் பிரதிநிதிபோல.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மறைந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு ஏ.வி.எம். சரவணன் தயாரித்தப் படம் “முரட்டுக்காளை’. அந்தப் படம் வந்த பிறகு நான் சரவணன் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
அதில் ‘உங்கள் அப்பாவின் ஆன்மா இப்பொழுதுதான் சாந்தி அடைந்திருக்கும்’ என எழுதியிருந்தேன். ஏ.வி.எம் சரவணன் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. ஆனால் இது இன்னொரு வகையில் ஈடு செய்யலாம்.
இப்போது அவர்களுடைய குடும்பத்தாரிடம் மீண்டும் ஏ.வி.எம் நிறுவனம் தொடர்ந்து படங்களை எடுக்க வேண்டும். சரவணன் சாரின் படத்தை போட்டு அவருக்கு அஞ்சலி என குறைந்தது 100 படங்களையாவது எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.” என்றார்.