தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித்திருக்கிறது.
ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது.
2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.