ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது.
சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது.
என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான்.
அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன்.
என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன்.