AVM Saravanan: “ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா…" – நடிகை ராணி

Spread the love

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். ‘சொர்க்கம்’, ‘ஆசை’ உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம்.

”டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணும்கிற நோக்கத்துலதான் சீரியல் தயாரிப்புல ஏவிஎம் நிறுவனம் இறங்குனதா என் அப்பா சொல்வார். ஷூட்டிங் ஷெட்யூல், சம்பளம் எல்லாமே அவ்வளவு ஒரு புரஃபஷனலா இருக்கும்.

ராணி
ராணி

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்பவாவது திடீர்னு வந்துட்டுப் போவார்.

ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பாராட்டணும்னாகூட ஷூட்டிங் ஸ்பாட்டுல பார்க்குற இடத்துல அதைச் செய்ய மாட்டார். அப்படி பண்றது தப்புன்னு சொல்வார். ஆபீஸுக்கு கூப்பிட்டு விட்டுதான் ‘நல்லா பண்றீங்க’னு சொல்லி பாராட்டுவார்.

சம்பள விஷயத்துல யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. ஏவிஎம் நிறுவனத்துல ஒர்க் பண்றோம்னா பேங்க் லோன் உடனே கிடைக்கும்.

அதேபோல ஏவிஎம் மெகா சீரியல்னா 15 நாள் வேலை கியாரண்டி. இன்னைக்கு மாதிரி சூழல் கிடையாது.

அவரும் ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன் உட்பட எல்லார் மீதும் அக்கறையா இருப்பார். யூனிட்டும் படு நேர்த்தியா இருக்கும்.

சரவணன்
சரவணன்

என்னைப் பொறுத்தவரை அம்மா வீடுனனு சொல்வேன். ஒரு குழந்தைக்கு சாப்பாடு தர்றது அம்மாதானே. ஏவிஎம் தயாரிச்ச முக்கால்வாசி தொடர்கள்ல எனக்கு கேரக்டர் தந்திடுவாங்க. அதனாலதான் அம்மா வீடுன்னு சொல்றேன். அவரோட நாலஞ்சு தடவைதான் பேசியிருப்பேன். நான் இன்டஸ்ட்ரியில பார்த்தவங்கள்ல அவ்வளவு ஒரு மேன்மையான மனுஷன்.

அவங்க சீரியல் தயாரிப்புல இருந்து ஒதுங்கினாங்கன்னு கேள்விப்பட்டப்போ எனக்கு அவ்வளவு வருத்தமா இருந்தது. சரவணன் சார் அவருடைய அப்பாவுக்குப் பிறகு தொழிலை எப்படிக் கட்டிக் காத்தாரோ அதேபோல அவருடைய பிள்ளைகளும் பண்ணியிருக்கலாம். அந்த ஸ்டூடியோ வேறு வேறு இடங்களா மாறுகிற காட்சிகளைப் பார்க்குறப்ப அவ்வளவு பாரமா இருக்கு மனசு” என்கிறார் இவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *