லக்னோ:
உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கின்ற முடக்குவாத நோயை குணப்படுத்துவதில் ஆயுர்வேத முறை சிறப்பாக உள்ளது என்பதை புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
லக்னோ பல்கலைக்கழகத்தின் மாநில ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முடக்குவாத சிகிச்சை மற்றும் நவீன ஆய்வு மையம், லக்னோவில் உள்ள உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையம், காசியாபாதில் உள்ள அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றை சேர்ந்த மூத்த ஆய்வாளர்கள் குழு இதற்கான ஆய்வை நடத்தியது.
சிறப்பாக உள்ளது
ஆய்வாளர்களின் கருத்துப்படி, முடக்குவாத நோயை குணப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவாகும். இது நோய்க்கான அறிகுறிகளை குறைப்பதோடு நோயாளிகளுக்கு நீண்டகால பயனளிக்க உதவுகிறது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளிக்கும். அதே நேரத்தில் ஆரம்ப நிலை முடிவுகளை உறுதி செய்ய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.
முடக்குவாதம் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து நோயாளிகள் விடுபடுவதற்கு பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளுடன் நவீன மருத்துவ அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதன் தேவையை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
Study Link : https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC11264181/