ரஷ்யா:
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் நீடித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போர் நடைபெற்று வரும் உக்ரைன் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்சியுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதினுடன் சந்திப்பு
இதைத்தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ரஷ்யா சென்று உள்ளார். அவர் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கான்ஸ்டான்டினோவ்ஸ்கி அரண்மனையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது உக்ரைன் போர், மற்றும் உலகலாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஏற்கனவே பிரிக்ஸ் அமைப்பில் சமீபத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
பிரிக்ஸ்மாநாடு
வருகிற அக்டோபர் 22-24 ந்தேதி வரை ரஷ்யாவில் உள்ள கசானில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உறுதி செய்துள்ளார்.
மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் : மம்தா அறிவிப்பு
எனவே இந்த பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி& புதின் சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.இந்தநிலையில் முன்னதாக அஜித்தோவல்-புதின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.