* 1982-ல் மலையாளத்தில் வெளியான படம் ‘ஓளங்கள்’. இது அவர் இயக்கிய முதல் மலையாளப் படம். பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, அமோல் பாலேகர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ஜானகி பாடிய ‘தும்பி வா தும்பக்குளத்தில்’ பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் க்ளாஸ் ஹிட் அடித்தது.
* 1982-ல் வெளியான படம் நிரீக்ஷனா. பானு சந்தர், அர்ச்சனா இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் சோதனை முயற்சியில் இறங்கி அங்கேயும் ஹிட் அடித்திருக்கிறார்.
* 1982-ல் ‘மூன்றாம் பிறை’ படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். நடிப்பிற்காக கமலுக்கும், ஒளிப்பதவிற்காக பாலுமகேந்திராவிற்கும் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. கண்ணதாசனின் கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே!’ இன்றைக்கும் எவர் கீரின்.

* 1983-ல் வெளியான மலையாளப் படம் ‘ஓமக்குயில்’. ஒய்.ஜி மகேந்திரன், அருணா, பூர்ணிமா ஜெயராம் நடித்திருக்கின்றனர். கன்னடத்தில் வெளியான ‘கோகிலா’ படத்தின் ரீமேக் இது.
* 1983-ல் இந்தியில் வெளியான படம் ‘சாத்மா’ கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக். இளையராஜா இசையமைத்த முதல் இந்திப் படமும் இதுதான்.