பேட்டிங் ஏமாற்றமாக இருக்கிறது-ரோஹித் சர்மா

Dinamani2f2024 082f18b29064 39bc 419b A2ad 85f4814fd37e2frohit.jpg
Spread the love

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 4) கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. இலங்கை அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டியில் தோல்வியடையும்போது எல்லா விஷயங்களும் நமக்கு ஏமாற்றமளிக்கும். இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததை மட்டும் காரணமாக கூற முடியாது. தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டது.

சிறிது ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். நாங்கள் நன்றாக விளையாடவில்லை. நாங்கள் எப்படி விளையாடினோம் என்பது குறித்து அதிகம் யோசிக்க விரும்பவில்லை. ஆனால், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது தொடர்பாக அணியில் ஆலோசனை இருக்கும். ஜெஃப்ரி வாண்டர்சே நன்றாக பந்துவீசினார் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *