BB Tamil 8: ‘பணப்பெட்டிய எடுக்கிற ப்ளான்லதான் ராயன் இருந்தான், ஆனா…’ – மஞ்சரி சொல்வதென்ன?|bigg boss tamil day 89 promo 3

Vikatan2f2025 01 032fglo0nw5w2fcapture.jpg
Spread the love

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக முத்துக்குமரன், ரயான் இடையே மோதல்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போதும் வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில், “என்னால டாஸ்க்கில்தான் என்னைய நிரூபித்துக்கொள்ள முடியும். எந்த ஒரு வார இறுதி நாளுக்காவும் நான் வெயிட் பண்ணது இல்ல. ஆனா இந்த வார இறுதி நாளுக்காக ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்குற மாதிரி இருக்கு’ என்று அருணிடம் ரயான் கூறுகிறார்.

“முத்துவைத் தோற்கடிக்கணும், ரயானுக்கு பாயின்ட்ஸ் வாங்கிக் கொடுக்கணும்கிறது என்னுடைய நோக்கம் இல்ல. ரயானைத் தோற்கடிக்க வேண்டும் அப்படின்னு நான் நினைக்கிறதுக்குக் காரணம் அவனுக்கு பாயின்ட்ஸ் நிறைய இருக்கு அதுனாலதான். அவன் என்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டு தேவையில்லாம வாய்விடுற மாதிரி இருக்கு” என்று ஜாக்குலின் மஞ்சரியிடம் புலம்ப மஞ்சரி ‘அவன் டிக்கெட் டு ஃபினாலே டிக்கெட் வாங்கிட்டு பணப்பொட்டியை எடுத்திட்டு போயிருவேன்னு சொன்னான்’ என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *