BB TAMIL 9:சவாலான பல‌ சூழல்களை பார்த்த திவ்யா டைட்டில் வென்ற‌தில் வியப்பில்லை! – நடிகை கம்பம் மீனா | serial actress meena shares her proud experience abouot divya’s victory in biggboss tamil 9

Spread the love

நூறு நாட்கள் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9, முடிவடைந்து வைல்டு கார்டு போட்டியாளராகச் சென்ற திவ்யா கணேஷ் டைட்டிலையும் வென்று விட்டார்.

திவ்யா கணேஷுடன் “பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்த கம்பம் மீனாவிடம் திவ்யாவின் வெற்றி குறித்து பேசினோம்.

” பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்வானதுமே நெருங்கிய நட்பு வட்டத்துக்கு விஷயத்தைச் சொன்னாங்க. அப்பவே டைட்டில் வாங்க வாய்ப்பு இருக்குனு நாங்க நினைச்சோம். ஏன்னா, அவங்க கூடப் பழகினதை வச்சு அப்படிச் சொன்னோம். அடிப்படையில் தைரியமான பொண்ணு. எந்த விஷயத்தையும் தெளிவா அணுகுவாங்க. வயசு குறைவே தவிர, நல்ல மெச்சூரிட்டி.

எந்தப் பின்புலமும் இல்லாம இன்டஸ்ட்ரிக்கு வந்து இப்பவரைக்கும் நிலைச்சு நிக்கறாங்களே, அதுல இருந்தே அவங்களைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கலாம்.

இதுவரையிலான வாழ்க்கையில பல சவால்களைக் கடந்து வந்தவ‌ங்க அவங்க. மூணு மாச ரியாலிட்டி ஷோ வாழ்க்கையா அவங்களை மிரட்டிடும்?

கம்பம் மீனா

கம்பம் மீனா

நான் இதுக்கு முன்னாடி பிக் பாஸ் தொடர்ச்சியாப் பார்த்ததில்லை. இந்த சீசனை திவ்யாவுக்காகவே எல்லா எபிசோடையும் பார்த்தேன். அந்த வீட்டுக்குள் அவங்க வலிந்து நடிக்கலை.

அதனால ஒருகட்டத்துல டைட்டில் வாங்கிடுவாங்கனு நினைக்கத் தொடங்கிட்டோம். நாங்க நினைச்சது அப்படியே நடந்திடுச்சு.

அதேபோல இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாகணும். சில சீசன்கள் போட்டியாளர்களாச் சென்ற எத்தனையோ பேரை பயங்கரமா டேமேஜ் பண்ணி அனுப்பியிருக்கு. இந்த ஒரு விஷயம் தான் ஆரம்பத்துல எனக்கு யோசனையா இருந்திச்சு.

ஆனா திவ்யாவுக்கு கடவுள் புண்ணியத்துல அது நடக்கலை. சந்தோஷமா போயிட்டு சாதிச்சுட்டு வந்திருக்காங்க. எங்க எல்லாருக்குமே ரொம்ப பெருமையா இருக்கு” என்கிறார் இவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *